மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பெண் செயல் அதிகாரி பணியிடை நீக்கம்
மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பெண் செயல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முறைகேடு புகார்களையொட்டி இயக்குனர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி செயல் அதிகாரி பரமேஸ்வரி. கடந்த 2016-17ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறைகள் கட்டியதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், பேரூராட்சி பகுதியில் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் பெற்றதாகவும், தூய்மை பணிகளுக்கான கருவிகள் வாங்கியதில் முறைகேடுகள் செய்ததாகவும் இவர் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன.
இந்த புகார்கள் தொடர்பாக தமிழக அரசின் பேரூராட்சிகள் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் தற்போது மண்ணச்சநல்லூர் பேரூராட்சி செயல் அதிகாரி பரமேஸ்வரி பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை பேரூராட்சிகளின் இயக்குனர் பிறப்பித்து உள்ளதாக திருச்சி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சதீஷ் தெரிவித்து உள்ளார்.