வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால் தொழில் அதிபரை கொன்றோம், கைதான 2 பேர் வாக்குமூலம்
வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால், தொழில் அதிபரை கொன்றோம் என்று கைதான 2 பேர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆனைமலை,
ஆனைமலையை அடுத்த சிங்காநல்லூர் நீரேற்று நிலையம் அருகே கடந்த 11-ந் தேதி காலை தலையில் பலத்த வெட்டு காயத்துடன் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
கொலை செய்யப்பட்டது பொள்ளாச்சி வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கந்தசாமி (வயது 46) என்பதும், வட்டிக்கு பணம் கொடுப்பது, கார் வாங்கி விற்பனை செய்வது, வீடு கட்டி விற்பது உள்ளிட்ட தொழில் செய்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆனதும் தெரிந்தது.
கந்தசாமியை கொலை செய்தவர்களை பிடிக்க வால்பாறை போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணியம் உத்தரவின் பேரில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், ஆழியார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு கந்தசாமியை கொலை செய்த 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
ஆனைமலை அருகே உள்ள சோமந்துறை தென்சித்தூர் மேற்கு வீதியை சேர்ந்த புலவர் ராமச்சந்திரன் என்பவரின் மகன் செந்தில்வேல் (44) டிப்ளமோ படித்துவிட்டு கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் மெக்கானிக்காக வேலை செய்துள்ளார். இவரது மனைவி கன்னிகாபரமேஸ்வரி பெத்தநாயக்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். செந்தில்வேல் கடந்த 5 ஆண்டுகளாக பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை ஒட்டிய வளாகத்தில் கார் ஒர்க்ஷாப்பை சொந்தமாக வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் கார் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இவரிடம் மஞ்சநாயக்கனூரை சேர்ந்த மனோகரன் மகன் கிருஷ்ணகுமார் (22) என்பவர் உதவியாளராக வேலை செய்துள்ளார். இதில் கார் வாங்கி விற்பதில் கந்தசாமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி செந்தில்வேல் அவரிடம் ரூ.30 ஆயிரம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார்.
கடந்த 10-ந் தேதி மாலையில் செந்தில்வேலின் ஒர்க்ஷாப்பிற்கு கந்தசாமி சென்று பணத்தை திருப்பிக்கொடுக்கும்படி கேட்டுள்ளார். செந்தில்வேல் ரூ.4 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனால் ரூ.10 ஆயிரம் கொடுத்தால்தான் இங்கிருந்து செல்வேன் என்று கூறிய கந்தசாமி அங்கேயே அமர்ந்துவிட்டார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்வேல் அருகே இருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து கந்தசாமியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மயக்கமானார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
அப்போது கந்தசாமியின் கழுத்தில் இருந்த சுமார் 5 பவுன் சங்கிலியை செந்தில்வேல் எடுத்துக்கொண்டார். அதன்பிறகு கிருஷ்ணகுமாரின் உதவியுடன் செந்தில்வேல் தனக்குச்சொந்தமான காரின் பின்புறம் கந்தசாமியின் உடலை வைத்தார். பிறகு இருவரும் சேர்ந்து நள்ளிரவில் ஒர்க்ஷாப்பை விட்டு காரில் புறப்பட்டனர்.
அதிகாலையில் சிங்காநல்லூர் நீரேற்று நிலையம் அருகே ரோட்டோரத்தில் கந்தசாமியின் உடலை போட்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தோம். கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி, உடலை கடத்த பயன்படுத்திய கார், கந்தசாமியின் தங்க சங்கிலி, அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கொலை நடந்து 3 நாட்களில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, வால்பாறை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம் ஆகியோர் பாராட்டினர். கைது செய்யப்பட்ட இருவரும் பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.