கோவில்பட்டி தொகுதியில் அரசு செவிலியர் கல்லூரி தொடங்கப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
கோவில்பட்டி தொகுதியில் அரசு செவிலியர் கல்லூரி தொடங்கப்படும் என, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி தொகுதியில் அரசு செவிலியர் கல்லூரி தொடங்கப்படும் என, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
பகுதிநேர ரேஷன் கடைகோவில்பட்டி கிருஷ்ணா நகரில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அருள் அரசு வரவேற்று பேசினார்.
செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கூட்டு குடிநீர் திட்டம்கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதி மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள இனாம் மணியாச்சியில் உள்ள ரேஷன் கடையில் சென்று பொருட்களை வாங்கி வந்தனர். இதையடுத்து பொதுமக்களின் வசதிக்காக கிருஷ்ணா நகரில் பகுதிநேர ரேஷன் கடை தொடங்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி மக்களின் 40 ஆண்டு கனவு திட்டமான 2–வது குடிநீர் திட்டத்துக்கு மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா ரூ.81 கோடியே 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதனை முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி, பொதுமக்களுக்கு அர்ப்பணித்து திறந்து வைத்தார்.
இதேபோன்று கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 யூனியன்களில் உள்ள 248 கிராமங்கள் பயன்பெறும் வகையில், ரூ.128 கோடி செலவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு தீரும். மேலும் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் சர்வதேச தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி ஆக்கி மைதானம், அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கோவில்பட்டி தொகுதியில் அரசு செவிலியர் கல்லூரி விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
கலந்து கொண்டவர்கள்விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், தாசில்தார் பரமசிவன், யூனியன் ஆணையாளர் பாலஹரிகர மோகன், மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், செண்பகமூர்த்தி, தலைமை ஆசிரியர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.