நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதிய திட்டம்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது சிறை சென்றவர்களுக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் என மராட்டிய அரசு சமீபத்தில் அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மும்பையில் நிருபர்களை சந்தித்த மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் இது குறித்து கூறியதாவது:-
நெருக்கடி நிலையின்போது சிறை சென்றவர்களுக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்குவது முறையாகாது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தை நெருக்கடி நிலையுடன் ஒப்பிட முடியாது.
மாநில அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை இந்த ஓய்வூதிய திட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். நெருக்கடிநிலை காலகட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த பாலாசாகேப் தியோரஸ் நெருக்கடி நிலைக்கு முழு ஆதரவு தெரிவித்தார். இப்படி இருக்கையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஓய்வூதியத்துக்கு உரிமை கோருவதின் நோக்கம் என்ன?.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நிருபர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், நெருக்கடிநிலை ஓய்வூதிய திட்டம் குறித்து கூட்டணி கட்சியான சிவசேனாவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார். மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே நெருக்கடிநிலையை ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போதைய பா.ஜனதா தலைமையிலான அரசு நெருக்கடிநிலைக்கு ஜனநாயகத்தின் இருண்ட காலமாக சித்தரிப்பது குறித்து சிவசேனா விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.