மும்பையில் தண்ணீர் கட்டணம் ‘திடீர்’ உயர்வு
மும்பையில் தண்ணீர் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
மும்பை,
மும்பை பெருநகரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு மாநகராட்சி சார்பில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மோதக் சாகர், தன்சா, துல்சி, விகார், பட்சா, மத்திய மற்றும் மேல் வைத்தர்னா ஆகிய ஏரிகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் நகருக்கு தண்ணீர் கொண்டு வந்து சப்ளை செய்யப்படுகிறது.
மும்பையில் கடந்த ஆண்டு தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, மாநகராட்சி தண்ணீர் கட்டணத்தை திடீரென நேற்று உயர்த்தி அறிவித்துள் ளது. இதன்படி ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையில் 3.72 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதன்படி தற்போது அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் இருந்து ஆயிரம் லிட்டருக்கு 4 ரூபாய் 91 பைசா வசூல் செய்யப்படுகிறது. இனி இந்த கட்டணம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் இருந்து 5 ரூபாய் 9 பைசாவாக வசூலிக்கப்படும். குடிசைவாசிகளிடம் இருந்து ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 4 ரூபாய் 8 பைசா வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி இந்த கட்டணம் 4 ரூபாய் 23 பைசாவாக ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
வணிகம் சார்ந்த நிறுவனங்களுக்கு தற்போது ஆயிரம் லிட்டருக்கு 36 ரூபாய் 88 பைசா வசூலிக்கப்படுகிறது. இவர்களுக்கான தண்ணீர் கட்டணம் 38 ரூபாய் 25 பைசாவாக ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தண்ணீர் கட்டணம் நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.