காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு முதல் கூட்டம் நடைபெற்றது.
பெங்களூரு,
2 கட்சிகளின் பொதுவான திட்டங்களை செயல்படுத்த 10 நாட்களில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்துள்ளன. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகிறார்கள். மேலும் கடந்த 6-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டதுடன், 2 கட்சிகளையும் சேர்ந்த 25 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதேபோல், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் மந்திரி பதவி கிடைத்தவர்கள் தாங்கள் எதிர்பார்த்த இலாகாக்கள் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில், கூட்டணி ஆட்சியை எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாமல் 5 ஆண்டுகள் முன்னெடுத்து செல்ல காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் பெங்களூருவில் நேற்று மாலையில் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்துவது, விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது, வாரிய தலைவர்கள் நியமனம், அடுத்த மாதம் (ஜூலை) தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, தேர்தலுக்கு முன்பாக 2 கட்சிகளும் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவது, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்பட பல்வேறு சாதக, பாதகங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகளின் முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 2 கட்சிகளும் அறிவித்துள்ள பொதுவான திட்டங்களை முதலில் செயல்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
அந்த திட்டங்கள் குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். இதற்காக காங்கிரஸ் சார்பில் 3 உறுப்பினர்களும், ஜனதாதளம்(எஸ்) சார்பில் 2 பேரும் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியினர் பொதுவான திட்டங்கள் குறித்து ஆலோசித்து அறிக்கை தர உள்ளனர். அறிக்கையில் உள்ள பொதுவான திட்டங்கள் குறித்து அடுத்து நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒப்புதல் அளித்து செயல்படுத்தப்படும்.
காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்கள்...
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து முன்னெடுத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 3-வதாக வாரிய தலைவர்களை ஒரு வாரத்திற்குள் நியமிப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாரிய தலைவர் பதவியில் 3-ல் 2 பங்கு காங்கிரசுக்கும், ஒரு பங்கு ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 30 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாரிய தலைவர்களை நியமிப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
பின்னர் சித்தராமையாவிடம், விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “2 கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள பொதுவான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். அதன்பிறகு, புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்து தீர்மானிக்கப்படும். விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஜனதாதளம்(எஸ்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,“ என்றார்.
ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சித்தராமையா கூறிவிட்டார். மேலும் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் குறித்தும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசித்ததாகவும், அதுபற்றி வெளிப்படையாக எதுவும் கூற முடியாது என்றும் சித்தராமையா கூறினார்.