தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை என்றால் கடும் நடவடிக்கை
நிலத்தடி நீரை அதிக அளவு உறிஞ்சும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் நிலத்தடி நீர் சேமிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
சிறிய மாநிலமான புதுவையில் மழைநீரை வீண்காக்க கூடாது. புதுவையில் வருடத்திற்கு 45 நாட்கள் மழை பெய்கிறது. மழைநீரை சேகரிக்கும் பொறுப்பு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் உண்டு. மழைநீரை சேகரித்து வைத்தால் நிலத்தடி நீர் மட்டம் கீழே போகாது. நிலத்தடி நீரை சேகரிக்க வில்லை என்றால் நமது எதிர்கால சந்ததியினர் பெரிதும் பாதிக்கப்படுவர்.
முன்பு நாட்டை பிடிப்பதற்காக போர் நடைபெற்றது. வரக்கூடிய காலத்தில் தண்ணீருக்காக சண்டை போடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தொழில்துறை அதிகாரிகள் ஒவ்வொரு தொழிற்சாலைகளையும் கண்காணிக்க வேண்டும். நிலத்தடி நீரை அதிக அளவு உறிஞ்சும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை என்றால் அந்த தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வளர்ச்சி துறை ஆணையர் அன்பரசு, அரசு துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுவையில் உள்ள தொழிற்சாலைகளில் சில தொழிற்சாலைகள் அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றனர். அந்த தொழிற்சாலைகள் மழை பெய்யும் போது மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்கு தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் அதிக அளவு நிலத்தடி நீரை எடுப்பதால் நீர்மட்டம் கீழே செல்கிறது. கடல் நீர் உள்ளே புகுந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.