மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.1¾ கோடி அபராதம் வசூல் : 1,603 வாகனங்கள் பறிமுதல்
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் மணல் கடத்தியதாக 1,603 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1¾ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து இரவு பகலாக மணல் கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகிறது. மோட்டார்சைக்கிள், ஆட்டோ, டிராக்டர், லாரி என அனைத்து வகையான வாகனங்கள் மூலமும் மணல் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாட்டு வண்டிகளிலும் மணல் கடத்தப்படுகிறது.
இதனை தடுக்க காவல் துறையினர், வருவாய்த்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணல் கடத்தலை தடுத்து ஆங்காங்கே போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் லாரி, மாட்டு வண்டிகள், டிராக்டர், ஆட்டோ போன்ற வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
வேலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டாக மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் ரோந்து சென்று மணல் கடத்தலை தடுத்து வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் வசூல் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதம் முதல், கடந்த மார்ச் மாதம் வரை ஓராண்டில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தியதாக மோட்டார்சைக்கிள், ஆட்டோக்கள், டிராக்டர்கள், லாரிகள் என மொத்தம் 1,603 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 1,685 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மணல் கடத்தல் தொடர்பாக ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கருங்கற்கள் கடத்தியதாக ரூ.7 லட்சம், கிரானைட் கற்கள் கடத்தியதாக ரூ.10 லட்சம் உள்பட மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.