அடகு கடைக்காரர் வீட்டில் 125 பவுன் நகைகள் கொள்ளை

விழுப்புரத்தில் அடகு கடைக்காரர் வீட்டில் 125 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

Update: 2018-06-11 22:30 GMT
விழுப்புரம்

விழுப்புரம் கணபதி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 49). இவர் புதுச்சேரி ஏம்பலத்தில் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் ஊட்டிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சென்னை அல்லது வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த பகுதியில் சிலர் தங்களது வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர். அந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று அந்த காட்சிகளை பார்வை யிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த கொள்ளை வழக்கில் துப்பி துலக்கி கொள்ளையர்களை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராபிசன், சப்-இன்ஸ்பெக்டர் மருது ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படை போலீசார், கொள்ளையர்களை விலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்