முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-06-08 22:30 GMT
திண்டுக்கல், 

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெகதீஷ்குமார் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் சாந்தி வரவேற்றார். மாநில செய்திதொடர்பு செயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் செல்மாபிரியதர்ஷன், பொருளாளர் பிரான்சிஸ் பிரிட்டோ உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மாணவர் சேர்க்கை நிறைவுபெற்ற பின்னரே உபரி ஆசிரியர் பணியிடத்தை கணக்கிட வேண்டும். ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவு இல்லாமல் நடத்த வேண்டும். 2013-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்