நெல்லை அருகே விபத்தில் வாலிபர் பலி
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளில் தடுமாறி விழுந்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
பேட்டை,
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் மேல தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சுதன் (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு சுத்தமல்லியில் நடந்த கோவில் கொடை விழாவை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறியதில் சுதன் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சுதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.