அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்
கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.
கரூர்,
கரூர் அரசு கலைக்கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் மொத்தம் 16 பிரிவுகளில் 1,200 இடங்கள் உள்ளன. வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மொத்தம் 5,248 எண்ணிக்கையில் விற்பனையானது. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 996 மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்திருந்தனர். இதில் 75 சதவீதம் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நேற்று நடந்தது. இந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 36-ம், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகளுக்கு 6-ம், விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்களுக்கு 36-ம், அகதி மாணவர்களுக்கு 3-ம் என மொத்தம் 81 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதில் கலந்து கொள்ள விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோர் தங்களது கலந்தாய்வு அழைப்பு கடிதத்துடன் அரசு கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்களை தனிதனியாக அழைத்து சான்றிதழ் உள்ளிட்டவற்றை சரிபார்த்து, கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஸ்வரன் தலைமையில் கலந்தாய்வு கமிட்டியில் உள்ள பேராசிரியர்கள் அவர்களுக்கான இடத்தினை ஒதுக்கினர். இதில் 46 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மற்ற இடங்களுக்கும் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
இன்று (புதன்கிழமை) பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், பி.எஸ்.சி. அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு வருகிற 8-ந் தேதியும், பி.காம், பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு- பொருளியல் உள்ளிட்ட பாடபிரிவுகளுக்கு வருகிற 11-ந் தேதியும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என அரசு கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.