தண்ணீரில் உள்ள கிருமிகளை அழிக்க...
மழை நீர் சுத்தமானதே. அது மாசு நிறைந்த நகரங்கள் மற்றும் நிலப்பரப்பின் வழியாக வழிந்தோடி ஆறு, குளங்களை அடையும்போது மாசடைந்து விடுகிறது.
தீமை செய்யும் நுண்கிருமிகள் அவற்றில் மிகுந்து விடுகிறது. இப்படி நீர்நிலைகளில் பெருகும் பாக்டீரியாக்களை, இரும்பு எக்கு (உருக்கு) மூலம் விரட்டிவிடலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்் அமெரிக்காவின் சவுத் டகோட்டா மாகாண பல்கலைக்கழக ஆய்வு மாணவர் பெங்க் டாய்.
வீணான எக்கு இரும்பு தகடுகளை பல அடுக்குகளாக உருவாக்கி அதன்வழியே நீர் ஊடுருவிச் செல்லச் செய்தபோது 99 சதவீத அளவில் பாக்டீரியாக்கள் வடிகட்டி அழிக்கப்படுவதை அவர் கண்டுபிடித்துள்ளார். அதிக காரஅளவு கொண்ட கடின நீரிலும் 90 சதவீத அளவு பாக்டீரியாக்களை இந்த நுட்பம் மூலம் சுத்தப்படுத்த முடியும் என்று தெரியவந்துள்ளது.
எனவே அடுத்ததாக 10 ஏக்கர் அளவுடைய ஒரு குளத்தில் இது பரிசோதித்துப் பார்க்கப்பட உள்ளது. இதிலும் வெற்றிபெற்றால் எளிமையான முறையில் மிகுதியான நீரை சுத்திகரித்துப் பயன்டுத்த முடியும் என்று தெரியவந்துள்ளது.