14-வது நாள் வேலைநிறுத்தத்தையொட்டி தஞ்சையில் கிராம தபால் ஊழியர்கள் உண்ணாவிரதம்
14-வது நாள் வேலை நிறுத்தத்தையொட்டி தஞ்சையில் கிராம தபால் ஊழியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
கிராமிய அஞ்சல்ஊழியர்களுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்க வேண்டிய 7-வது ஊதியக்குழுவிற்காக கமலேஷ் சந்திரா தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு, அவரும் அரசிற்கு பரிந்துரை வழங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. ஆனால் அந்த பரிந்துரை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை மத்தியஅரசு அமல்படுத்தக் கோரி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நேற்று 14-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஊழியர்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.
இதில் பொருளாளர் கருப்புசாமி, தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் அரசு, செயலாளர் முனியகுமரன், பொருளாளர் பால்ராஜ், கிராமிய தபால் ஊழியர்கள் சங்க தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் தசரதன், பொருளாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் கோட்ட செயலாளர் மருதையன் நன்றி கூறினார்.
தஞ்சை கோட்டத்தில் உள்ள தஞ்சை, பாபநாசம், மன்னார்குடி பகுதிகளை உள்ளடக்கி 235 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இந்த தபால் நிலையங்களை சேர்ந்த 570 ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கிளை தபால் நிலையங்கள் செயல்படவில்லை. இந்த பகுதிகளில் தபால் பட்டுவாடா உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.