தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம், நெல்லை மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மேம்பட முதல் கட்டமாக 42 பேருக்கு ரூ.8 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலான மண்பாண்டம் செய்வதற்கான எந்திரங்களை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 3 பேருக்கு நவீன செயற்கைக்கால் முட்டிக்கு கீழ்உள்ள உபகரணங்களையும், 2 பேருக்கு நவீன செயற்கைக்கால் முட்டிக்கு மேல் உள்ள உபகரணங்களையும், ஒருவருக்கு லென்ஸ் கண்ணாடியும், 7 பேருக்கு ஊன்றுகோலும் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 782 மதிப்பிலானவை ஆகும். நிகழ்ச்சியில் மொத்தம் 55 பேருக்கு ரூ.9 லட்சத்து 75 ஆயிரத்து 782 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்ட், கதர் கிராமத் தொழில்கள் துறை உதவி இயக்குனர் சுதாகர், கிராமத் தொழில் கூட்டுறவு அலுவலர் சரவணராஜா, உதவி கதர் அலுவலர் கோபாலகிருஷ்ணன், கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறுகையில், குற்றாலத்தில் சீசன் தொடங்க இருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று கல்வி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்படி அதிக கல்வி கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளிக்கூடங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.