கோரேகாவில் 7,500 மலிவுவிலை வீடுகள் மகாடா கட்டுகிறது

கோரேகாவில் 7,500 மலிவுவிலை வீடுகளை மகாடா கட்டுகிறது.

Update: 2018-06-03 22:50 GMT
மும்பை, 

கோரேகாவில் 7,500 மலிவுவிலை வீடுகளை மகாடா கட்டுகிறது.

7,500 மலிவுவிலை வீடுகள்

மும்பையில் மராட்டிய வீட்டு வசதி ஆணையம் (மகாடா) சார்பில் வீடுகள் கட்டப்பட்டு குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மும்பை கோரேகாவில் 7,500 மலிவு விலை வீடுகளை கட்ட மகாடா முடிவு செய்து உள்ளது.

இந்த வீடுகளை கட்டுவதற்காக பிஜி சிர்கே என்ற கட்டுமான நிறுவனத்தை மகாடா நியமித்து உள்ளது.

2022-ம் ஆண்டு முடியும்

இதுபற்றி மகாடா நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கோரேகாவில் மலிவுவிலை வீடுகள் கட்டும் பணியை வரும் 2022-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 70 சதவீத வீடுகள் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு விற்பனை செய்யப்படும்’ என்றார்.

இந்தநிலையில், மும்பையில் கட்டப்பட்டு உள்ள 1,100 குறைந்த விலை வீடுகளை விற்பனை செய்வதற்கான அறிவிப்பு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.

அதன்பின்னர் சில நாட்களில் அந்த வீடுகளுக்கான குலுக்கல் நடைபெறும் என மகாடா மூத்த அதிகரி தீபேந்தர் சிங் கூறினார்.

மேலும் செய்திகள்