திருப்பத்தூர் அருகே குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பிய தொழிலாளி கைது
திருப்பத்தூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரப்பிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்,
குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிய தொழிலாளி கைது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூர் ராவுத்தம்பட்டியை சேர்ந்த ஜெகதீசன் மகன் யாதவமூர்த்தி (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் பகுதியில் குழந்தைகள் கடத்தும் கும்பல் சுற்றி திரிவதாக ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் வெளியிட்டிருந்தார்.
அதில் “குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்த 400 பேர் திருப்பத்தூரில் இறங்கி இருக்கிறார்கள். அவர்கள் கிராமப்புற பள்ளி மாணவர்களை குறிவைத்து கடத்துகிறார்கள்” என்று கூறியிருந்தார். இந்த வதந்தி ‘வாட்ஸ்-அப்’, முகநூல் (‘பேஸ்புக்’) உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வைரலாக பரவியது. இதனால் திருப்பத்தூர் பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்தனர்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாராவது சுற்றி திரிந்தால், அவர்களை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவங்கள் நடைபெற்றது. மனநோயாளிகள் தான் இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். மேலும் போளூர் பகுதியில் ஒரு பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பொதுமக்கள் பீதியடையும் வகையில் வதந்திகளை ‘வாட்ஸ்-அப்’ மூலம் பரப்பிய யாதவமூர்த்தியை கைது செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டார். அதன்பேரில் திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜேசுராஜ் மேற்பார்வையில், திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, அருள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், யாதவமூர்த்தி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இது பற்றி திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ் கூறுகையில், “வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் சம்பந்தமாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என துண்டுப்பிரசுரம், ஒலிபெருக்கி, ‘வாட்ஸ்- அப்’ மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் சிலர் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தற்போது தவறான தகவல் பரப்பிய நபரை கைது செய்து இருக்கிறோம். யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அவ்வாறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.