கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போல தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வருகிறது.
இதனால் கிருஷ்ணகிரி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 44.28 அடியாகும். அணையின் தற்போதைய நீர்மட்டம் 42.89 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 640 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதேபோல கிருஷ்ணகிரி அணையின் தற்போதைய உச்சபட்ச நீர்மட்டம் 42 அடியாகும். நேற்று அணையின் நீர்மட்டம் 38.05 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 662 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று முன்தினம் 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
நேற்று முதல் அணையில் இருந்து 1,017 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரும் நாட்களில் தண்ணீர் வரத்து அதிகமானால் மேலும் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.