தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கருணாநிதி பிறந்த நாள் விழா
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், 95 கிலோ கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிதா நவாப் முன்னிலை வகித்தார்.
இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து 95 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த 12 குழந்தைகளுக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் தலா ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரத்தை மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. அணிவித்தார். பின்னர் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக இருந்தவர்களுக்கு ரொட்டி, பழம், கேக் போன்றவை வழங்கப்பட்டது. தொடர்ந்து நகரில் தி.மு.க. கொடியேற்றி வைக்கப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நகர அவைத்தலைவர் தர்மன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் அஸ்லாம், மீனா நடராஜன், மாதவன், திருமலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கனல்சுப்பிரமணி, வேலு, சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். விழாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, கட்சி கொடி ஏற்றி வைத்து, 95 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் ரங்கநாதன், முனுசாமி, நல்வேடி மாணிக்கம், வீரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா இண்டூரில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், ஒன்றிய நிர்வாகிகள் கண்ணன், சித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார். விழாவில் நிர்வாகிகள் ராஜ்குமார், சரவணன், பாண்டுரங்கன், குமரன், சின்னராஜ், கிருஷ்ணன், தேவன், மாதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரிமங்கலத்தில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் மாதையன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, ஒன்றிய அவைத்தலைவர் தீர்த்தகிரி, இளைஞர் அணி செயலாளர் தங்கதுரை உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.