எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி 12-ந் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் வருகிற 12-ந் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்க கும்பகோணம்-நாகை மண்டலங்களின் நிர்வாகக்குழு கூட்டம் தஞ்சையில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அப்பாத்துரை கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கூட்டத்தில், 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அகவிலைப்படி 139 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியர்களுக்கு 119 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. நிலுவையில் உள்ள 20 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதை போல போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் குடும்ப நலநிதி வழங்க வேண்டும்.
செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி வருகிற 12-ந் தேதி மாலை 6 மணிக்கு தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரிடெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் அமல்படுத்துவதை கைவிட்டு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், நிர்வாகிகள் வெங்கடபிரசாத், அழகிரி, அருள்தாஸ், ராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.