விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஸ்டீபன்ராஜ் கண்டன உரையாற்றினார்.
இதில் ஆர்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.