பேன்சி கடை உரிமையாளர் வீட்டில் 8½ பவுன் நகை–ரூ.60ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

புதுக்கோட்டையில் பேன்சி கடை உரிமையாளர் வீட்டில் 8½ பவுன் நகைகள், ரூ.60 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Update: 2018-06-03 20:30 GMT

தூத்துக்குடி,

புதுக்கோட்டையில் பேன்சி கடை உரிமையாளர் வீட்டில் 8½ பவுன் நகைகள், ரூ.60 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

பேன்சி கடை

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுடலைமுருகன் (வயது 40). இவர் புதுக்கோட்டை பஜார் கடலை கடை சந்திப்பு பகுதியில் பேன்சி கடை வைத்து உள்ளார். இவர் கூட்டாம்புளி ரோட்டில் புதிதாக வீடு கட்டி உள்ளார். எனவே பழைய வீட்டில் உள்ள பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக புது வீட்டுக்கு மாற்றி கொண்டிருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த 31–ந்தேதி புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள சுடலைமுருகன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த தங்க சங்கிலிகள், மோதிரம் உள்ளிட்ட 8½ பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.60 ஆயிரத்தை திருடி சென்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதனை அறிந்த சுடலைமுருகன், புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து, வீட்டில் தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்.

மேலும் செய்திகள்