கொள்ளையடிப்பதற்காக ஏரிக்கரையில் பதுங்கி இருந்த 4 பேர் கைது

கூடுவாஞ்சேரி அருகே கொள்ளையடிப்பதற்காக ஏரிக்கரையில் பதுங்கி இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-03 23:00 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கூடுவாஞ்சேரி போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மகிதா மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது ஏரிக்கரையில் உள்ள முள்புதரில் பதுங்கி இருந்த 4 பேர் போலீசார் வருவதை கண்டு தப்பி ஓட முயன்றனர்.

தப்பி ஓட முயன்ற 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து 4 பேர் மீது கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மேல்கல்வாய் பகுதியை சேர்ந்த அர்ஜுன் (வயது 21), கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (23), பிரசாந்த் (21), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த 18 வயதானவர் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்