பழனி அருகே வாய்க்காலில் பாய்ந்த அரசு பஸ், பயணிகள் உயிர் தப்பினர்

பழனி அருகே வாய்க்காலில் அரசு பஸ் பாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2018-06-03 21:30 GMT

பழனி,

பழனியில் இருந்து காரைக்குடி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 40–க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பழனி–திண்டுக்கல் சாலையில் ஆயக்குடி அருகே சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வாய்க்காலில் பாய்ந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று பஸ்சை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.

மேலும் செய்திகள்