வேலூர் மாவட்டத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வை 2,291 பேர் எழுதுகின்றனர்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புக்கான முதல்நிலை தேர்வு (யு.பி.எஸ்.சி.) தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
வேலூர்,
தேர்விற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட தேர்வு கண்காணிப்பாளரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பு செயலாளருமான சாந்தா சர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வேலூர் உதவி கலெக்டர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சண்முகநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் வேலூர் ஊரீசு கல்லூரி, ஊரீசு பள்ளி, வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மகளிர் பள்ளி, கிருஷ்ணசாமி முதலியார் பள்ளி, தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக்கல்லூரி, ஹோலிகிராஸ் பள்ளி, டி.கே.எம். மகளிர் கல்லூரி என 7 இடங்களில் 9 மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு நடக்கிறது.
இத்தேர்வை 2,291 பேர் எழுத உள்ளனர். தேர்வு காலை, மாலை என 2 வேளைகளில் நடக்கிறது.
தேர்வை கண்காணிக்க மத்திய, மாநில அரசின் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதில், வேலூர் உதவி கலெக்டர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சண்முகநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.