கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும்
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, போளூர் மற்றும் செங்கம் என 5 மாவட்ட கல்வி அலுவலகங்கள் உள்ளன. மேலும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் என்ற பதவி வட்டார கல்வி அலுவலர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மறுசீரமைப்பு சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் அனைத்து அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், மழலையர் பள்ளிகள், நலத்துறை பள்ளிகள், நிதி உதவி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சுய நிதிப்பள்ளிகள் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி, திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பள்ளி தலைமை ஆசிரியர்கள் வளாகத் தூய்மை, வகுப்பறை தூய்மை முறையாக செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்களாக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?, 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 106 பள்ளிகள் கட்டண நிர்ணயம் செய்ய தங்கள் விவரங்களை கட்டண நிர்ணயக்குழு இணையதளத்தில் பதிவு செய்யவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,500 பள்ளிகள் செயல்படுகிறது. அனைத்து பள்ளிகளும் சமமானவை. அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் எங்களுக்கு ஒன்று தான். இந்த ஆண்டு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பாடநூல் வழங்க வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து புத்தகங்களை பெற்று மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
மாணவர்கள் தங்கள் குறைகளை முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க 875 425 2452 என்ற இலவச தொலைபேசி எண்ணை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் இதனை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் திட்டமிட்டு உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் உஷாராணி, பள்ளிகளின் துணை ஆய்வாளர் குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.