மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை எதிரொலி: குமரி மாவட்டத்தில் மீன்கள் விலை கடும் உயர்வு
மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் குமரி மாவட்டத்தில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி,
கடலில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப் படகுகளில் சென்று மீன்பிடிக்க அரசு தடைவிதிப்பது உண்டு. அதே போல இந்த ஆண்டும் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாகக் கொண்டு மீன் பிடிக்கும் விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல குளச்சல் முதல் கேரளா வரையிலான மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு நேற்று முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், மேற்கு கடற்கரை பகுதியான குளச்சல் துறைமுகத்தை சேர்ந்த விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளங்கள் மற்றும் கட்டுமரங்கள் மட்டுமே மீன் பிடிக்கச் செல்கின்றன. இதில் அதிக அளவில் மீன்கள் கிடைப்பது இல்லை. எனவே மாவட்டத்திற்கு தேவையான அளவு மீன்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு என்ற நிலைமையே நிலவி வருகிறது.
இதன் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. காரணம், மார்க்கெட்டுகளுக்கும் மிகவும் குறைவாகவே மீன்வரத்து உள்ளது. மதுரை, திருச்சி, சென்னை மார்க்கெட்டுகளுக்கும் கேரளாவிற்கும் அதிக அளவில் மீன்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்டு வந்தது. அந்த நிலை மாறி மாவட்டத்தின் தேவைக்கே மீன்கள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் குறைந்த விலையில் விற்பனையான சிறிய ரக மீன்கள் கூட தற்போது பல மடங்கு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய ரக மீன்கள் கடலில் கிடைக்காததால் சிறிய ரக மீன்கள் தான் விற்பனைக்கு வருகிறது. அந்த மீன்களை வாங்கவும் கிராக்கி அதிகமாக இருந்து வருகிறது.
மார்க்கெட்டில் விளமீன் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரைக்கும், பாறை மீன் கிலோ ரூ.300 முதல் ரூ.380 வரைக்கும், சீலாநெய்மீன் கிலோ ரூ.1000 முதல் ரூ.1500 வரைக்கும், சூறை மீன் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரைக்கும் சாளை மீன் ஒன்று ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலைமை சீரடைய இன்னும் 2 வார காலம் ஆகும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.