மறுபிரேத பரிசோதனையில் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை
மறுபிரேத பரிசோதனை 100 சதவீதம் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. எனவே, இதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இதில் 7 பேரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, மருத்துவக்கல்லூரி டீன் லலிதா மற்றும் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் 7 பேரின் உடல்கள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நேற்று மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் முன்னிலையில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி டாக்டர், 2 தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழு பிரேத பரிசோதனை செய்தது. இதில் செல்வசேகர் (வயது 42), சண்முகம் (38), கார்த்திக் (20) ஆகியோரது உடல்கள் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காளியப்பன் (22), கந்தையா (58) ஆகியோரின் உடல்கள் இன்று (அதாவது நேற்று) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மறு பிரேத பரிசோதனை செய்த 2 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடக்கிறது. 100 சதவீதம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை. மீதம் உள்ள 6 பேரின் உடல்கள் கோர்ட்டு உத்தரவின்படி பரிசோதனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுவரை இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2½ கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு அளவில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. பள்ளிகள் 100 சதவீதம் திறக்கப்பட்டு உள்ளன. மாணவ- மாணவிகள் 100 சதவீதம் வருகை தந்து உள்ளனர். இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.