மாணவர்களின் வருகை பதிவு குறைந்தால் தேர்வு எழுத முடியாது துணைவேந்தர் பாஸ்கர் பேச்சு
மாணவர்களின் வருகை பதிவு குறைந்தால் தேர்வு எழுத முடியாது என்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிலைக்குழு கூட்டத்தில் துணைவேந்தர் பாஸ்கர் கூறினார்.
பேட்டை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 47-வது நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:-
நமது நாட்டின் கல்வி முறை மிகவும் பழமையான பாரம்பரியம் கொண்டது. குருகுலத்தில் மாணவர்கள் ஏட்டு கல்வி மட்டும் அல்லாமல் வாழ்க்கை கல்வியையும் கற்றனர். அதுபோல் தற்போதைய கல்விமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுக்கும் வகையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
மாணவர்கள், பாடம் மட்டும் அல்லாமல் செய்முறை பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். அப்போதுதான் கல்வி சிறப்பாக அமையும். மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு துணைவேந்தர் பாஸ்கர் பேசினார்.
அதுபோல் பாடம் வாரியாக வருகைப்பதிவு கணக்கீடு இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதனால் பாடங்கள் எடுக்கும் ஆசிரியர் மாணவர்களின் வருகைப்பதிவு குறித்த விவரங்களை துறைத்தலைவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த வருகைப்பதிவின்படியே மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் 75 சதவீத வருகைப்பதிவு இல்லை என்றால் மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தை மீண்டும் எழுத வேண்டும் என்பது குறித்த விதிமுறையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். அதற்கு துணைவேந்தர், மாணவர்களுக்கு 75 சதவீதம் வருகைப்பதிவு என்பது கட்டாயமாகும். வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு அனைத்து ஆசிரியர்களும், துறைத்தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் துணைவேந்தர் பேசுகையில், “நிலைக்குழு கூட்டத்தில் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் கூட்டத்துக்கு வர வேண்டும். அவர்கள் வர முடியவில்லை என்றால், அவர்கள் சார்பில் பிரதிநிதியை அனுப்ப வேண்டும். இல்லை என்றால் அடுத்த கூட்டம் முதல் சம்பந்தப்பட்டவர்களின் தீர்மானம் நிறுத்தி வைக்கப்படும். கல்விசார் நிலைக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
கூட்டத்தில் பல்கலைக்கழகம் வழங்க உள்ள கிரேடு முறை மதிப்பெண் பட்டியல் குறித்த விவரங்களை தேர்வாணையர் சுருளியாண்டி விளக்கி பேசினார். கூட்டத்தில் நிலைக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 2018-19ம் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த முடிவுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். இந்த ஆண்டு முதல் மாணவர்களின் வருகைப்பதிவு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. 75 சதவீதத்திற்கு குறைவாக வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் தேர்வு எழுத முடியாது. மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்கள் இருந்தால் அதற்கான சான்று வழங்க வேண்டும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு 60 முதல் 74 சதவீத வருகைப்பதிவு இருக்க வேண்டும்.