தென்மேற்கு பருவமழை குறித்த முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை குறித்த முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது.

Update: 2018-05-31 23:27 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்புடைய அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள் குறித்து வருவாய் கோட்ட அலுவலர்கள், அனைத்து தாசில்தார்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி, சுகாதாரத்துறை, மீன்வளத்துறை, மின்சாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, போக்குவரத்துத்துறை, மோட்டார் வாகன பராமரிப்புத்துறை போன்ற அவசர கால துறைகளை சேர்ந்த அலுவலர்கள் விழிப்புணர்வுடன், அடிப்படை தேவைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேல் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்