கியாஸ் சிலிண்டர் வெடித்து சிறுவன் சாவு தாய், தந்தை உள்பட 4 பேர் படுகாயம்
நவிமும்பையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 வயது சிறுவன் உயிரிழந்தான். அவனது தாய், தந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,
நவிமும்பை கலம்போலி 3-வது செக்டர் எல்.ஐ.ஜி. காலனியை சேர்ந்தவர் பபன் காட்டே(வயது42). இவரது மனைவி சுபாங்கி. இவர்களுக்கு 5 வயதில் சோஹம் காட்டே என்ற மகன் இருந்தான். இவர்களது பக்கத்து வீட்டில் நானசோ ஜாதவ்(35) என்பவர் தனது மனைவி அஸ்வினியுடன் வசித்து வருகிறார்.
நேற்று அதிகாலை நானசோ ஜாதவின் வீட்டில் உள்ள சமையல் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருந்ததாகவும், இது தெரியாமல் அஸ்வின் வீட்டில் உள்ள மின்விளக்கு சுவிட்சை போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் இருவரது வீட்டுக்கும் மத்தியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிறுவன் சோஹம் காட்டே படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். 70 சதவீதம் தீக்காயம் அடைந்த அஸ்வினி ஐரோலி தேசிய தீக்காய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற 3 பேரும் காமோட்டே எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.