ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி
முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்காளர் அடையாள அட்டை முறைகேடு புகாரை அடுத்து ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியிலும், பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை தொடர்ந்து பெங்களூரு ஜெயநகர் தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அந்த 2 தொகுதிகளை தவிர மீதமுள்ள 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
அதில் பதிவான ஓட்டுகள் கடந்த 15-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 38 தொகுதியிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றனர். தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்தன.
ஆயினும் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அனுமதி வழங்கினார். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முனிரத்னாவும், பா.ஜனதா சார்பில் துளசி முனிராஜூகவுடாவும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் ராமசந்திராவும் போட்டியிட்டனர். அந்த தொகுதியில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தப்படி கடந்த மாதம் (மே) 28-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 55 சதவீத ஓட்டுகள் பதிவாயின.
அந்த தொகுதியில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் அந்த தொகுதிக்கு உட்பட்ட ஞானாக்சி பள்ளி கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. திட்டமிட்டப்படி நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதற்கு முன்பு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா வேட்பாளர் துளசி முனிராஜூகவுடா 189 ஓட்டுகள் பெற்று முன்னிலை பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தை பிடித்த ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் ராமச்சந்திரா 182 ஓட்டுகளை பெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா 145 ஓட்டுகளை பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதும், மின்னணு வாக்கு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மேஜைக்கு எடுத்து வரப்பட்டு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா முன்னிலை பெற்றார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற 18 சுற்றுகளிலும் அவரே முதல் இடத்தை பிடித்தார். அவர் தொடர்ந்து கடைசி சுற்று வரை முன்னிலை பெற்றார்.
இறுதியில் 18-வது சுற்றின் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா 1 லட்சத்து 8 ஆயிரத்து 64 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் 25 ஆயிரத்து 492 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தார். பா.ஜனதா வேட்பாளர் துளசி முனிராஜூ கவுடா 82 ஆயிரத்து 572 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் ராமச்சந்திரா 60 ஆயிரத்து 360 ஓட்டுகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தார். நோட்டாவுக்கு 2,724 ஓட்டுகள் விழுந்தன.
சுமார் 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அவர் தொடர்ச்சியாக 2-வது முறையாக வெற்றி அடைந்துள்ளார். இந்த வெற்றி மூலம் சட்ட சபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலம் 77-ல் இருந்து 78 ஆக அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்துநியாமகவுடா எம்.எல்.ஏ. சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலத்தில் ஒன்று குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.