அரசியல் ரீதியாக தலையிட மாட்டேன் உயர் அதிகாரிகளிடம் குமாரசாமி உறுதி

முதல்-மந்திரி குமாரசாமியை கர்நாடக உயர் போலீஸ் அதிகாரிகள் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2018-05-31 22:33 GMT
பெங்களூரு,

போலீஸ் துறையின் செயல்பாட்டில் நான் அரசியல் ரீதியாக தலையிட மாட்டேன். கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் எந்தவிதமான சட்டவிரோத செயல்களையும் நான் சகித்துக்கொள்ள மாட்டேன். இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நீங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். நீங்கள் அரசியல் நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

அப்போது முதல்-மந்திரியிடம் மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ, கர்நாடகத்தில் குழந்தை கடத்தல் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாகவும், அதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ரத்னபிரபா கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்