முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி தொழிலாளி கைது
கெலமங்கலம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள நெருப்புக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் விஜயகுமார் (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சக்கரவர்த்தி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை விஜயகுமார் அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சக்கரவர்த்தி தான் வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து ராஜகோபால் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் விசாரணை நடத்தி சக்கரவர்த்தியை கைது செய்தார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கைதான சக்கரவர்த்தியை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.