ஒரே படத்தில் வளமையும் வறுமையும்!

ஒரே படத்தில் ஏற்றத்தாழ்வை தனது புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார், அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஜானி மில்லர்.

Update: 2018-06-01 22:00 GMT
விண்ணை முட்டும் பளபள கட்டிடங்கள், சாரிசாரியாய் சீறும் வாகனங்கள் என்று ஒருபுறம் பிரம்மிப்பூட்டும் மாநகரங்கள், குடிசைகள், அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் மக்கள் என்று மறுபுறம் பரிதாபப்பட வைக்கும்.

இந்தப் பெரும் ஏற்றத்தாழ்வை தனது புகைப்படங்கள் மூலம் பளிச்சென வெளிப்படுத்தியிருக்கிறார், அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஜானி மில்லர்.

முதலில் இவர், தென்ஆப்பிரிக்க நகரங்களில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ‘டிரோன்’ காமிராக்கள் மூலம் படம்பிடித்தார்.

பின்னர் மெக்சிகோ சிட்டி, மும்பை, நைரோபி, டெட்ராய்ட் உள்ளிட்ட உலகின் பிற பெருநகரங்களையும் அவ்வாறே படம் பிடித்தார்.

டிரோன் மூலம் காட்சிப்படுத்தப்படும் புகைப்படங்கள் மூலம் நகரங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வை உணரமுடிவதாக ஜானி மில்லர் கூறுகிறார்.

‘‘நமது சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை ஒளிந்து கிடக்கிறது. அதை தரையில் இருந்து பார்க்க முடியாது. நிலத்தில் உள்ள தடுப்புகள், நகரங்களில் நிலவும் அதீத பொருளாதார வேறுபாடுகளை பார்க்கவிடாமல் செய்கின்றன’’ என்கிறார் அவர்.

ஒரே இடத்தில் காணப்படும் வளமையையும் வறுமையையும் படத்தில் பதிவு செய்திருக்கும் ஜானி மில்லரை பாராட்டத்தான் வேண்டும். 

மேலும் செய்திகள்