ஆன்லைனில் கிடைக்கும் பல் துலக்கும் குச்சி..!

செக் குடியரசைச் சேர்ந்த யானி நிறுவனம், ஆன்லைனில் பல் துலக்க உதவும் உகாய் மரக் குச்சிகளை விற்பனை செய்கிறது.

Update: 2018-05-31 22:15 GMT
கடந்த 7000 ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்திலும், மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் உகாய் குச்சிகளைப் பல் துலக்கப் பயன்படுத்தி வந்திருக் கிறார்கள். அதை இன்று வருமானம் தரக் கூடிய ஒரு தொழிலாக மாற்றிவிட்டது இந்த நிறுவனம். ஒரு சிறிய குச்சியின் விலை 322 ரூபாய்!

புதிய கண்டுபிடிப்பு போல விளம்பரப்படுத்தி, இலவசமாக கிடைக்கும் குச்சியை ஏராளமான விலைக்கு விற்றுவரும் இந்த நிறுவனத்துக்கு மக்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்