மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல்
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்தும், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும் நேற்று நெல்லை, களக்காடு, ஆலங்குளத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம்,
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்தும், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும் நேற்று நெல்லை, களக்காடு, ஆலங்குளத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்தும், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூட்டை கண்டித்தும் ஆலங்குளம் புதிய பஸ்நிலையம் அருகே தி.மு.க.வினர் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கபாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சமுத்திரபாண்டி, மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டி, துணை செயலாளர் செல்லப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு
இதேபோன்று களக்காட்டில் அண்ணா சிலை முன்பு நேற்று தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சித்திக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வ கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜின்னா, நகர இளைஞரணி அமைப்பாளர் ஏசுதாஸ், துணை அமைப்பாளர் அருணாச்சலம், மாவட்ட பிரதிநிதி பீட்டர் உள்பட 29 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும் களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ராஜரத்தினம் ஆகியோர் கைது செய்தனர்.
நெல்லை
இதேபோன்று மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் நெல்லை சந்திப்பு அண்ணாசாலை முன்பு தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் பாளையங்கோட்டை பஸ்நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த 2 இடங்களிலும் மைதீன்கான், ஆவுடையப்பன் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.