ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை
4 மாதத்துக்குள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மதுரை ஐகோர்ட்டு நேற்று தடை விதித்ததுடன் 4 மாதத்திற்குள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியையும், சமூக ஆர்வலருமான பாத்திமா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் தனது 2-வது யூனிட்டை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கடந்த 2009-ம் ஆண்டு அனுமதி பெற்றது. ஆனால் அனுமதி பெற்ற இடத்தில் விரிவாக்கம் செய்யாமல் தெற்கு வீரபாண்டியபுரத்தில் 2-வது யூனிட் தொடங்குவதற்கான பணிகளை செய்து வருகின்றனர். இது சட்டவிரோதம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் விதிகளுக்கு எதிரானது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்கவில்லை.
மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தவறான தகவல் கொடுத்து 2-வது யூனிட் தொடங்க அனுமதி வாங்கியது சட்ட விரோதம். எனவே 2-வது யூனிட் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு அபராதம் விதித்து உத்தரவிட வேண்டும்.“
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதாசுமந்த் ஆகியோர் முன்பு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதங்களையும், அரசு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிப்பதற்காக, நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதாசுமந்த் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று விசாரணைக்கு அமர்ந்தனர். அப்போது அவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்தும், 2-வது யூனிட் பணிகளை உடனடியாக நிறுத்தும்படியும் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு தடையில்லா சான்று வழங்குவது குறித்து பொதுமக்களிடம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் செப்டம்பர் 23-ந்தேதிக்குள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும், தடையில்லா சான்று வழங்குதல் தொடர்பாக மத்திய அரசு 4 மாதங்களுக்குள் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அதுவரை எந்தவொரு கட்டுமான பணியும் தொடரக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து ஐகோர்ட்டு விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் ரஜினி, கண்ணன் உள்ளிட்ட பலர் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுரேஷ்குமார் அமர்வு முன்பு முறையிட்டனர். இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், வக்கீல் கண்ணன் உள்பட 6 பேர், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.