தூத்துக்குடியில் தடையை மீறி உண்ணாவிரதம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது
தூத்துக்குடியில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உண்ணாவிரதம்தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
5 பேர் கைதுஇந்த நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வேளையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்தக்கூடாது. இங்கிருந்து உடனே கலைந்து செல்லுங்கள் என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தெரிவித்தார். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர்.
இதையடுத்து அருண்சக்திகுமார் தலைமையிலான போலீசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.