‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன? அரசு மருத்துவக்கல்லூரி டீன் விளக்கம்
‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் சோமசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
நாகர்கோவில்,
‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு 10 பேர் இறந்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் அருகாமையில் அமைந்துள்ள தமிழகத்துக்கும் இந்த காய்ச்சல் பரவுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசும், சுகாதாரத்துறையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களில் ஒன்றான குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு சென்று வருபவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் மூலம் ‘நிபா‘ வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் மூலமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்தநிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் சோமசேகர் தலைமையில் ‘நிபா‘ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், சந்தேகப்படும்படியான காய்ச்சல் தொற்றுடன் வருபவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், மருத்துவத்துறை தலைவர்கள், அவசர சிகிச்சைப்பிரிவு டாக்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் டீன் டாக்டர் சோமசேகர் ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் குறித்து கூறியதாவது:–
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து குமரி மாவட்டம் 7, 8 மாவட்டங்களை தாண்டி உள்ளது. எனவே ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் குமரி மாவட்டத்துக்கு வரவாய்ப்பில்லை. இருந்தாலும் அதை தடுக்க தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச்சென்று டாக்டரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மருந்துக்கடைகளில் தாங்களாக மாத்திரை– மருந்துகள் வாங்கி சாப்பிடக்கூடாது.
நிபா வைரஸ் நோய் பழந்திண்ணி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும். வவ்வாலின் கழிவுகளில் இருந்துதான் நிபா வைரஸ் பரவுகிறது. இந்த நோய்த் தொற்றுக்கு பன்றிகளும் ஆளாகின்றன. எனவே பன்றிகளில் இருந்தும் மனிதனுக்கு இந்த நோய் பரவலாம். எனவே பன்றிகளை பராமரிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும். பன்றிக்காய்ச்சலின்போது முகத்தில் முககவசம் அணிந்ததைப் போன்று என்–95 முககவசம் அல்லது 3 லேயர் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
‘நிபா‘ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கையாளக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நோயாளியை தொட்டால் நன்றாக கைகளை கழுவியபிறகுதான் மற்றொரு நோயாளியை தொட வேண்டும். பெரும்பாலும் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும்போது கை குலுக்கிக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஒருவருக்கு ஒருவர் கைகளை கூப்பி வணக்கம் செலுத்திக்கொள்ளலாம்.
கடுமையான காய்ச்சல், தசைமூட்டுவலி, தலைவலி, கண் எரிச்சல், தொண்டைவலி, தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு வலிப்பு, மூளை காய்ச்சல் போன்றவை நிபா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். எனவே எந்தமாதிரியான காய்ச்சலாக இருந்தாலும் முறையான சிகிச்சை, தொடர் கண்காணிப்பு ஆகியவைதான் இதன் தடுப்பு நடவடிக்கைகள் ஆகும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சலை தடுக்க தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளன.
சந்தேகப்படும்படியான காய்ச்சல் அறிகுறிகளோடு வருபவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக்கல்லூரியில் தேவையான வசதிகள் உள்ளன. நிபா வைரஸ் காய்ச்சலை உறுதிசெய்து கொள்ள சென்னையில் உள்ள அரசு ரத்த பரிசோதனை மையம் மூலமாக ரத்த மாதிரிகள் பூனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்டறியப்படும். கேரளாவில் வேலைக்கு சென்று திரும்பும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். எனவே நிபா வைரஸ் காய்ச்சல் யாரும் பீதி அடையத்தேவையில்லை. மக்களை யாரும் பயமுறுத்த வேண்டாம்.
காய்ச்சி, ஆறவைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சுகாதாரமற்ற முறையில் பொதுஇடங்களில் விற்பனை செய்யப்படும் பழங்களை வாங்கி சாப்பிடக்கூடாது. அடிக்கடி கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். அரைகுறையாக கடித்த பழங்களை, பாதி சேதம் அடைந்த பழங்களை சாப்பிடக்கூடாது. பாழும் கிணறுகளில் வவ்வால்கள் அதிக அளவு இருக்கும். எனவே வயல் வேலை செய்யும் விவசாயிகளும் கவனமாக இருக்க வேண்டும். எல்லோரும் முன்னெச்சரிக்கையோடு, கவனமாக இருந்தால் இந்த ‘நிபா‘ வைரஸ் காய்ச்சலை தடுக்கலாம்.
இவ்வாறு டீன் சோமசேகர் கூறினார்.
‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் இயக்குனர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசி ஆலோசனை வழங்கினர். அதேபோல் குமரி மாவட்ட கலெக்டருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் மருத்துவக்கல்லூரி டீன் சோமசேகர், சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.