மயங்கி கிடந்த பெண்ணை கற்பழித்து கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம் பிரேத பரிசோதனை விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கோவையில் கீழே தள்ளி விட்டதில் மயங்கி கிடந்த பெண்ணை கற்பழித்து கழுத்தை நெரித்து கொன்றது பிரேத பரிசோதனை விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

Update: 2018-05-22 22:45 GMT
கோவை

கோவை ராமநாதபுரம் ராமலிங்க ஜோதி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 38), சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (35). இவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டுவேலைகளை செய்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (34). இவர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். சுந்தரம் குடும்பத்து டன் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால், மணிவேல் வீட்டை கவனித்து வந்தார்.

கடந்த 17-ந் தேதி மாலையில் மணிவேல், ஜெயந்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, வீட்டை சுத்தம் செய்ய வரும்படி கூறினார். அதன்பேரில் சென்று ஜெயந்தி வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வீட்டிற்குள் சென்ற மணிவேல், ஜெயந்தியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி, மணிவேலை கடுமையாக திட்டினார்.

இதில் ஆத்திரம் அடைந்த மணிவேல், அவரை பிடித்து கீழே தள்ளியதுடன், அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, உடலை சாக்குமூட்டைக்குள் வைத்து கட்டி சிங்காநல்லூர் குளத்தேரி அருகே சாக்கடையில் வீசினார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் மணிவேலை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ஜெயந்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில், ஜெயந்தி கற்பழித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

இதற்கான அறிக்கையை டாக்டர்கள் ராமநாதபுரம் போலீசாரிடம் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட போலீசார், ஏற்கனவே மணிவேல் மீது போடப்பட்ட கொலை வழக்குடன் சேர்த்து பாலியல் பலாத்காரம் பிரிவையும் சேர்த்து பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கார் டிரைவர் மணிவேல் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று அழைத்ததின் பேரில் கடந்த 17-ந் தேதி மாலை சுந்தரத்தின் வீட்டிற்கு ஜெயந்தி சென்றுள்ளார். அப்போது மணிவேல் திடீரென்று ஜெயந்தியை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி அவரை கடுமையாக திட்டினார்.

உடனே ஆத்திரம் அடைந்த மணிவேல், ஜெயந்தியை தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஜெயந்தி மயக்கம் அடைந்தார். இதை சாதகமாக பயன்படுத்திய மணிவேல், அவரை கற்பழித்து உள்ளார். ஜெயந்தி மயக்கம் தெளிந்து எழுந்தால் தன்னை காட்டி கொடுத்து விடுவார் என்று நினைத்த மணிவேல், ஜெயந்தியை கழுத் தை நெரித்து கொலை செய்து உள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடந்த விசாரணையில் ஜெயந்தி கற்பழிக்கப்பட்டது அம்பலமாகி இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்