தஞ்சை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தக் கோரி தஞ்சை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
கிராமிய அஞ்சல்ஊழியர்களுக்கு 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்க வேண்டிய 7–வது ஊதியக்குழுவிற்காக கமலேஷ் சந்திரா தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு, அவரும் அரசிற்கு பரிந்துரை வழங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. ஆனால் அந்த பரிந்துரை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை மத்தியஅரசு அமல்படுத்தக் கோரி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தஞ்சை மாவட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவரும் தஞ்சை ரெயிலடி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோட்ட உதவி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் ஜானகிராமன், பொருளாளர் கருப்புசாமி, செயலாளர் மருதையன், முதன்மை ஆலோசகர் செபஸ்டின், ஆலோசகர்கள் ஜெயராமன், சாகுல்அமீது, தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் அரசு, முனியகுமரன், பொருளாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேவை பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 858 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 537 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கிராமப்புறங்களில் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.