கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் தொழிலாளி மர்ம சாவு கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
ஆரல்வாய்மொழி அருகே நள்ளிரவில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் தொழிலாளி மர்மமான முறையில் வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம், வேம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 37). இவர் சகாயநகரில் ஒரு ரப்பர் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தீபலட்சுமி (26) என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உண்டு. இவர்களுடைய வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் அருணாசலத்தின் தந்தை முருகன் வசித்து வருகிறார்.
அருணாசலத்துக்கு மது பழக்கம் உண்டு. மேலும் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த முருகன், மகனின் வீட்டுக்கு சென்று இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் முருகன் தனது வீட்டுக்கு தூங்க சென்றார்.
தொடர்ந்து அதிகாலை 2.30 மணியளவில் தீபலட்சுமி, பதறியடித்து கொண்டு முருகன் வீட்டுக்கு சென்றார். அங்கு மாமனார் முருகனிடம், தன்னுடைய கணவர் அருணாசலம் வீட்டில் பிணமாக கிடப்பதாகவும், கயிறு கழுத்தில் இறுக்கிய நிலையில் அறுந்து கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகன் விரைந்து சென்று பார்த்த போது, அருணாசலம் வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தை சுற்றிலும் கயிறு இருந்தது.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து முருகன் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அருணாசலம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ நடந்த போது தீபலட்சுமியை தவிர வேறு யாராவது வீட்டுக்குள் புகுந்தனரா? என்பதை கண்டறிய சம்பவம் நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்பு தான் அருணாசலம் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.