கணவரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார்
திருமணத்தன்று அக்கா மறுத்ததால் கட்டாயப்படுத்தி உறவினருடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண், கணவரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் கலைவாணி(வயது 20). இவர் நேற்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் குடவாசலை அடுத்த மேலாதிச்சமங்கலம் குடியான தெருவில் வசித்து வந்த நான், தற்போது தஞ்சை முத்தமிழ்நகரில் வசித்து வருகிறேன். எனது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது சகோதரியை, எனது தாயாரின் தம்பிக்கு திருமணம் செய்ய நிச்சயித்தனர். திருமணம் நடைபெற இருந்த நாள் அன்று எனது சகோதரி திருமணத்தை நிறுத்தி விட்டார்.
இதையடுத்து பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த மைனர் பெண்ணான என்னை கட்டாயப்படுத்தி எனது மாமாவுக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு என்னைவிட 20 வயது அதிகம். நானும் மனவெறுப்புடன் திருமணத்திற்கு சம்மதித்தேன்.
இதுவரை நாங்கள் கணவன், மனைவியாக வாழவில்லை. மாறாக என்னை ஒரு அடிமையைப் போன்று வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார். இந்த நிலையில் எனது தாய் இறந்ததையடுத்து, எனது சகோதரியும், கணவரின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு என்னை அவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்துகிறார்.
அடிக்கடி குடித்து விட்டு வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். இந்த நிலையில் கடந்த 25-4-2018 அன்று நான் வீட்டை விட்டு வெளியே வந்து தஞ்சையில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி தையல் வேலை செய்து வாழ்ந்து வருகிறேன்.
இதையடுத்து நான் வக்கீல் மூலம் விவாகரத்து கேட்டு மனு அனுப்பினேன். இதையடுத்து நான் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அங்கு உறவினர்களுடன் வந்து என்னை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
இதனால் நான் பயத்துடன் வாழ்ந்து வருகிறேன். எனது ஆதார் அட்டை, செல்போன் அனைத்தும் அவரிடம் உள்ளது.
எனவே எனது சகோதரி மற்றும் கணவரை அழைத்து விசாரிப்பதுடன், கொலை மிரட்டல் விடுத்து கொடுமை செய்ததற்கு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எனது திருமணத்தின்போது கொடுத்த நகை, சீர்வரிசை பொருட்கள் மற்றும் எனது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பள்ளி சான்றிதழ்களையும் மீட்டு என்வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.