பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-05-21 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் வடக்கு கோபுர வாசல் தெருவை சேர்்ந்தவர் பிரவீன்(வயது 38). இவர் திருவாரூர் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

கோடை விடுமுறையை கழிக்க இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 16-ந் தேதி பொள்ளாச்சி சென்றார். இதனால் வீட்டு சாவியை பிரவீன் தனது உறவினர்் திலகவதியிடம் கொடுத்து விட்டுச் சென்றார்.

இந்த நிலையில் திலகவதியின் மகன் வெங்கடேஷ், நேற்று முன்தினம் பிரவீன் வீட்டிற்கு சென்று பாாத்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், வீட்டினுள் சென்று பார்த்தபோது மேஜை டிராயர் திறந்து இருந்தது, அதில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவாரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்