பெங்களூரு மாநகராட்சி என்ஜினீயர்கள் 5 பேர் பணி இடைநீக்கம்

வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறை சரி செய்யாமல் இருந்த பெங்களூரு மாநகராட்சி என்ஜினீயர்கள் 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2018-05-20 23:36 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12–ந் தேதி நடந்தது. இந்த தேர்தலின்போது பணியை சரியாக செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டதாக பெங்களூரு மாநகராட்சியின் 5 என்ஜினீயர்களை மாநகராட்சி நிர்வாக பிரிவு கூடுதல் கமி‌ஷனர் நளின் அதுல் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பெங்களூரு பொம்மனஹள்ளி மண்டல தலைமை என்ஜினீயர் சித்தேகவுடா, உதவி செயற்பொறியாளர் அசோக், எச்.எஸ்.ஆர். லே–அவுட் உதவி செயற்பொறியாளர் ஆனந்த்ராஜூ, உதவி என்ஜினீயர் சித்திக், டொம்லூர் பகுதி உதவி என்ஜினீயர் லட்சுமணப்பா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டபோது வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யாமல் இருந்ததால், இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்