சென்னையில் கல்லூரி பேராசிரியை உள்பட 3 பெண்களிடம் 17 பவுன் நகை பறிப்பு
சென்னையில் கல்லூரி பேராசிரியை உள்பட 3 பெண்களிடம் 17 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம் சாந்தி காலனியை சேர்ந்தவர் மேகலை(வயது 65). நேற்று காலை சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்றார்.
கோவில் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென மேகலை கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராணி(40). இவர், நேற்று காலை அருகில் உள்ள கவரைத்தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ராணியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் முத்தமிழ் நகர் 17-வது தெருவைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். தனியார் நிறுவன அதிகாரி. இவருடைய மனைவி உண்ணாமலை சங்கீதா(34). இவர், திருநின்றவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். முத்தமிழ் நகர் பகுதியில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென உண்ணாமலை சங்கீதா கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டார். இதுபற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.