நம்பிக்கை வாக்கெடுப்பு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேசியதாக எடியூரப்பா ஒப்புதல்
கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய எடியூரப்பா, பாரதீய ஜனதாவுக்கு போதிய மெஜாரிட்டி கிடைக்காததால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பெங்களூரு,
பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாததால் அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.
சட்டசபையில் பேசும் போது இதுபற்றி எடியூரப்பா குறிப்பிட்டார்.
அப்போது, எதிர்தரப்பு (காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள்) எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் தான் தொடர்பு கொண்டு பேசியதாக கூறிய அவர், எதிர்தரப்பில் இருந்து சிலர் பாரதீய ஜனதாவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாகவும் கூறினார்.
அந்த கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏ.க்களை தனியாக அழைத்துச் சென்று பாதுகாப்பில் வைத்ததால் குடும்பத்தினர் கூட அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அப்போது அவர் கூறினார்.