வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: பொதுமக்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும், தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்
புதுவையில் சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுவதால் பொதுமக்கள் வாக்காளர் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பாக அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை கொண்டு வீடுவீடாக ஆய்வு செய்யும்படி அறிவித்துள்ளது. இந்த பணியின்போது வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வாக்காளர்களின் தகவல்களை வீடுவீடாக சென்று சரிபார்ப்பார்கள்.
* 1.1.2018 அன்று தகுதியடைந்த விடுபட்ட வாக்காளர்களிடம் இருந்து அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-யை பெறுவர்.
* 1.1.2019 அன்று தகுதியடைய உள்ள வாக்காளர்களிடமிருந்து அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-யை பெறுவர்.
* வெளிநாடு வாழ் இந்திய வாக்காளராக இருப்பின் அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6ஏ-யை பெறுவர்.
* இறந்த வாக்காளரின் பெயரை நீக்க அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து படிவம் 8-யை பெறுவர்.
* அதே தொகுதிக்கு உள்ளாகவோ அல்லது அதே பகுதிக்கு உள்ளாகவோ முகவரி மாற்றம் இருப்பின் படிவம் 8ஏ-யை பெறுவர்.
* பழைய 16 இலக்க எண் கொண்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்கும் வாக்காளர்களிடம் இருந்து புதிய 10 இலக்க எண் கொண்ட வாக்காளர் புகைப்பட அட்டை வழங்க படிவம் 8-யை தனியாக பெறுவர்.
* தேர்தலின்போது மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு கூடுதல் வசதி செய்துதர வாக்காளர் பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளரின் இயலாமை தன்மை பற்றி தகவல்களை பெறுவர்.
* ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பெயர் பதிவு செய்துள்ள வாக்காளர்களின் விவரங்களை சரி பார்ப்பார்கள்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தந்து தவறில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.