மணல் திருட்டை தடுத்த போலீசாரை கொலை செய்ய முயற்சி 2 வாலிபர்கள் கைது

சோழவந்தான் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க சென்ற போலீசாரை கொலை செய்ய முயற்சித்த 2 வாலிபர்களை கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-16 21:45 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே காடுபட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட சித்தாதிபுரம் வைகையாற்று பகுதியில் (28.03.2018) அன்று மணல் வாகனங்கள் மூலமாக கொள்ளையடிப்பதாக தகவல் தெரிந்து காடுபட்டி போலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் போலிசார் வருவதை கண்டவுடன் மணல் ஏற்றிய லாரியுடன் தப்பிக்க முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்தனர். கொள்ளையர்கள் தடுத்த போலிசார் மீது வாகனத்தை ஏற்றி கொள்ள முயற்சி செய்தனர். அங்கிருந்த போலீசார் வாகத்தை சுற்றி வளைத்தவுடன் வாகனத்தில் இருந்த 2 வாலிபரும் தப்பியோடினர். லாரியை போலிசார் காடுபட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று தப்பியோடிய இருவர் மீதும் கொலை முயற்சி வாக்கு பதிவு செய்து

அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றைய முன்தினம் வாகன சோதனையின் போது பிடிபட்ட புளயங்குளத்தை சேர்ந்து ராஜபாண்டியும் அவரது நண்பர் தேங்கில்பட்டி சேர்ந்த மார்கண்டேயன் மகன் முத்து என்பவரும் சேர்ந்து மணல் கொள்ளையை தடுத்த போலிசாரை வாகனத்தை ஏற்றி கொள்ள முயற்சித்ததாக ஒப்புக் காண்டார். இதன் பேரில் தலைமறைவாக இருந்த முத்துவையும் போலிசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்